பி.எம்.இந்தியா
ஸ்ரீமத் விஜயரத்ன சுந்தர் சூரிஷ்வர்ஜி மகராஜின் 500-வது புத்தகத்தை இன்று காணொலிக் காட்சி மூலம் வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இந்த புனிதமான தருணத்தில் முதலில் மதிப்பிற்குரிய புவன்பானு சூரிஷ்வர் ஜி மகராஜை வணங்கி மரியாதை செலுத்துவதாக குறிப்பிட்டார்.
ஸ்ரீமத் விஜயரத்ன சுந்தர் சூரிஷ்வர் ஜி மஹாராஜின் 500-வது புத்தக வெளியீட்டைக் காணும் பாக்கியம் இன்று அனைவருக்கும் கிடைத்துள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார். அவர், ஆளுமை கட்டுப்பாடு, எளிமை, தெளிவு ஆகியவற்றின் தனித்துவமான கலவை என்றும், அவரது வார்த்தைகள் அனுபவத்தின் ஆழத்தைக் கொண்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார். மகாராஜின் 500-வது புத்தகமான “பிரேம்னு விஷ்வ, விஷ்வனோ பிரேம்” என்ற நூல், நல்ல கருத்துகளைப் பேசுகிறது என்றும், இதன்மூலம் மொத்த மனிதகுலமும் பயனடையும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
மகாராஜின் 500 படைப்புகளும் எண்ணற்ற சிந்தனை ரத்தினங்களைக் கொண்ட ஒரு பரந்த கடல் போன்றவை என்றும், அவை மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்கு எளிய ஆன்மீக தீர்வுகளை வழங்குகின்றன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். காலத்தையும் சூழ்நிலைகளையும் பொறுத்து, இந்த வெவ்வேறு நூல்கள் வழிகாட்டும் விளக்குகளாகச் செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதில், மகாராஜ் போன்ற துறவிகளின் வழிகாட்டுதல் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை அவர் சுட்டிக் காட்டினார். மகாராஜ்-ஜியின் 500வது புத்தகம் வெளியிடப்படுவதற்கு மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பிரதமர் தெரிவித்தார். மகாராஜின் எண்ணங்கள் இந்தியாவின் அறிவுசார், தார்மீக பயணத்தை தொடர்ந்து ஒளிரச் செய்யும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213391®=3&lang=1
***
TV/PLM/RK
PM @narendramodi's message during the release of Shrimad Vijayaratna Sunder Surishwarji Maharaj’s 500th book. https://t.co/5QrcO8oGc6
— PMO India (@PMOIndia) January 11, 2026