Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹஸ்ரத் இமாம் ஹுசைனுக்கு பிரதமர் மரியாதை


பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் காலத்தால் அழியாத தியாகத்தையும், உண்மை, நீதி ஆகியவற்றுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் நினைவு கூர்ந்து, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இமாம் ஹுசைனின் வாழ்க்கையும் தியாக மரணமும், தைரியம், உறுதி ஆகியவற்றின் சக்திக்கு ஒரு நிலையான நினைவூட்டலாக நிற்கின்றன என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

“ஹஜ்ரத் இமாம் ஹுசைன் அவர்களின் தியாகம், உண்மையையும் நீதியையும் தேடும் பயணத்தில் உறுதியாக நிலைத்திருக்க பலருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல், தைரியம், உறுதியான நம்பிக்கை ஆகியவற்றின் நிலையான சக்தியையும் அது நினைவூட்டுகிறது.”

 

(Release ID: 2278113)

****

TV/PLM/SH