Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹைட்ரோகார்பன் அகழ்வு மற்றும் லைசென்ஸ் வழங்கும் கொள்கை


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ஹைட்ரோகார்பன் அகழ்வு மற்றும் லைசென்ஸ் வழங்கும் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது.

இந்த கொள்கையின் நான்கு முக்கிய அம்சங்கள் :

1) ஹைட்ரோகார்பனின் அனைத்து வகைகளையும் எடுப்பதற்கு ஒரே மாதிரியான லைசென்ஸ்.

2) வெளிப்படையான நிலப்பரப்பு கொள்கை

3) எளிதாக நிர்வகிக்கக் கூடிய வருவாய் பகிர்வு

4) உற்பத்தி செய்யப்படும் அணைத்து எண்ணை வளம் மற்றும் எரிவாயுவை சந்தைப்படுத்த மற்றும் விலை நிர்ணயம் செய்ய சுதந்திரம்.

இந்த முடிவு எண்ணை மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரித்து, இத்துறையில் மூலதனத்தை அதிகரித்து நல்ல வேலை வாய்ப்பையும் உருவாக்கும். நிர்வாகக் கட்டுப்பாடுகளை குறைத்து, வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும் இது உதவும்.

ஒரே மாதிரியான லைசென்சுகள், ஒரே லைசென்சின் கீழ், மீத்தேன் ஷேல் வாயு, ஷேல் எண்ணை, எரிவாயு, வாயு ஹைட்ரேட்டுகள் போன்ற அனைத்து வகையான ஹைட்ரோகார்பன்களையும் ஒரே லைசென்ஸ் மூலம் எடுக்க வகை செய்கிறது. சீரான நிலப்பரப்பு கொள்கை, நிறுவனங்களை தேவைப்பட்ட இடத்தில் படுகைகளை தேர்ந்தெடுக்க உதவும்.

செலவை வசூல் செய்யும் மற்றும் உற்பத்தியோடு இணைந்த கட்டணம் போன்ற தற்போதைய நடைமுறை மாற்றப்பட்டு, எளிதாக நிர்வகிக்கக் கூடிய வருவாய் பகிரும் திட்டம் அமலுக்கு வரும். இதற்கு முன்னர் இருந்த நடைமுறையின்படி, இதில் கிடைக்கும் லாபம், அரசு மற்றும் நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்ளப்படும். உற்பத்தி செலவை வசூல் செய்தபின் லாபம் பகிர்ந்து கொள்ளப்படும். லாபப் பகிர்வு முறையின்படி, அரசு தனியார் உற்பத்தியாளர்களின் செலவுக் கணக்குகளை சரி பார்த்தல் அவசியமாக இருந்தது. அது பல்வேறு தாமதங்களுக்கும், சிக்கல்களுக்கும் வழி வகுத்தது. புதிய நடைமுறையின்படி, செலவுகள் குறித்து அரசு கவலைப்படாது. ஆனால் எண்ணை மற்றும் எரிவாயு விற்பனையின் வருவாயை பகிர்ந்து கொள்ளும். தொழில் தொடங்க ஏதுவான சூழல் என்ற அரசின் கொள்கையை ஒட்டியது இந்த புதிய கொள்கை.

ஆழ்கடல் படுகைகளில் எண்ணை மற்றும் வாயு எடுப்பதில் உள்ள அதிக செலவுகளை கணக்கில் கொண்டு, அந்த இடங்களில் எடுக்கப்படும் எண்ணை மற்றும் வாயுக்களுக்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்த இடங்களில் அகழ்வு பணிகளை ஊக்கப்படுத்தும். ஆழமற்ற பகுதிகள் மற்றும் ஆழமான மற்றும் மிக ஆழமான பகுதிகளில் நடத்தப்படும் அகழ்வுகளுக்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிலத்தில் செய்யப்படும் அகழ்வுகளுக்கான கட்டணத்தில் மாற்றமில்லை. இதனால் அரசின் வருவாய் பாதிக்கப்படாது. புதிய கொள்கையின்படி, ஒதுக்கப்படும் படுகைகளுக்கு வரி, இறக்குமதி வரி போன்றவை விதிக்கப்படாது. இந்த புதிய கொள்கையினால், கச்சா எண்ணை மற்றும் எரிவாயு உற்பத்திகளை சந்தைப் படுத்துவது எளிதாக்கப்பட்டுள்ளது. “குறைந்த அரசு, நிறைந்த நிர்வாகம்” என்ற அரசின் கொள்கையின்படி இது செயல்படுத்தப்பட்டுள்ளது.