Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற சவ்ரப் சவுத்திரிக்கு பிரதமர் வாழ்த்து


இந்தோனேஷியாவின் ஜகார்த்தா-பாலம்பங்கில் நடைபெறும் 18 ஆவது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் 2018-ல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சவ்ரப் சவுத்திரிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“நமது இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில், 16 வயதான சவ்ரப் சவுத்திரி ஆற்றலும், திறமையும் வாய்க்கப் பெற்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018-ல் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கத்தை நாட்டுக்கு கொண்டு வந்த இந்த இளைஞருக்கு வாழ்த்துக்கள்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

*********