பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06.06.2026) இந்தியாவின் இளம் ஹாக்கி வீரர்களின் சிறப்பான சாதனையைப் பாராட்டியுள்ளார். 2026-ம் ஆண்டுக்கான 18 வயதுக்குட்பட்ட ஆடவர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போட்டித்தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான திறமையையும் குழுப்பணியையும் வெளிப்படுத்தி, இறுதிப் போட்டியில் ஒரு மறக்க முடியாத வெற்றியைப் பெற்றதாக திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றியானது, இளைஞர்கள் மத்தியில் ஹாக்கியின் பிரபலத்தைப் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், அணியின் எதிர்கால முயற்சிகளுக்குத் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“நமது இளம் ஹாக்கி வீரர்களின் அற்புதமான சாதனை!
2026-ம் ஆண்டுக்கான 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை வென்ற இந்தியாவின், 18 வயதுக்குட்பட்ட ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்திய அணி, போட்டி முழுவதும் அபாரமான திறமையையும் குழுப்பணியையும் வெளிப்படுத்தி, இறுதிப் போட்டியில் ஒரு மறக்க முடியாத வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியானது, நமது இளைஞர்களிடையே ஹாக்கியின் வளர்ந்து வரும் பிரபலத்தையும் பிரதிபலிக்கிறது. அணியின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்.
(Release ID : 2269827)
***
TV/PLM/SH
A splendid accomplishment by our young hockey players!
— Narendra Modi (@narendramodi) June 6, 2026
Congratulations to the Indian Men’s U18 Hockey Team on winning the Men’s U18 Asia Cup 2026. The team displayed exceptional skill and teamwork throughout the tournament, culminating in a memorable victory in the final. This… pic.twitter.com/w5xIVAvN13