பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழு 2014 ரயில்வே மாநாட்டுக் குழுவின் “2014 -15, 2015 – 16 ஆண்டுகளுக்கான லாப பங்கு வீதம் மற்றும் இதர சம்பந்தப்பட்ட விஷயங்கள்” குறித்த முதலாவது அறிக்கை அடிப்படையில் அமைந்த பரிந்துரைகளை ஏற்பதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிளும் தாக்கல் செய்ய முடிவெடுத்தது. பொது வருவாய் லாப பங்கு வீதம் 2014 – 15க்கு 5 சதவீதம் 2015 – 16க்கு 4 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டது. இது ரயில்வேகளில் பொது வருவாயில் இருந்து முதலீடு செய்யப்பட்ட மொத்த மூலதனத்திற்கும் (லாப ஈவு இல்லாத மூலதனம் நீங்கலாக) பொருந்தும்.
2014 ரயில்வே மாநாட்டுக் குழுவின் முதலாவது அறிக்கையின் 5,6,9,11,12,13,14,15,16,17,18,19 பத்திகளில் அடங்கியுள்ள பரிந்துரைகளை ரயில்வே அமைச்சகம் அமல் படுத்துவதற்கு இந்த நடவடிக்கை வழி வகுக்கும்.