Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2015க்குப் பிந்தைய வளர்ச்சியை ஏற்றுக் கொள்வது குறித்த ஐக்கிய நாடுகள் அவையின் மாநாட்டில், நியூயார்க் நகரில் உரையாற்றி, இருதரப்பு கூட்டங்களில் பங்கேற்கிறார் பாரதப் பிரதமர்.


25 செப்டம்பர் 2015 அன்று, பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், 2015க்குப் பிந்தைய வளர்ச்சியை ஏற்றுக் கொள்வது தொடர்பான ஐக்கிய நாடுகள் அவை மாநாட்டில் உரையாற்றுகிறார்.

பிரதமர், ஐக்கிய நாடுகள் அவயையில் பொதுச் செயலர் திரு.பான் கி மூன் அவர்களை சந்திக்கிறார். உலக வங்கியின் தலைவர் திரு.ஜிம் யாங் கிம் அவர்களையும் சந்திக்கிறார் பிரதமர்.

இதையடுத்து, ஜோர்டான் நாட்டின் மன்னர், பூட்டான் நாட்டின் பிரதமர், இலங்கை அதிபர், ஸ்வீடன் நாட்டின் பிரதமர், எகிப்தின் அதிபர், செயின்ட் லூசியாவின் பிரதமர், மற்றும் சைப்ரஸ் நாட்டின் அதிபர் ஆகியோரையும் சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தை நிகழ்த்த உள்ளார் பாரதப் பிரதமர்.

•••••••