பி.எம்.இந்தியா
பிரதமர் மோடியின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பினாமி பரிவர்த்தனைகள் (தடுப்பு) மசோதாவில் சில திருத்தங்களைக் கொண்டு வர ஒப்புதல் அளித்துள்ளது.
சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் மசோதாவுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இந்த திருத்தங்கள் செய்யப்பட இருக்கின்றன. இதன்மூலம் மசோதா சட்டமாகும்போது எழும் நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்க முடியும்.
இந்த சட்டத்திருத்தத்தால் பினாமி பரிவர்த்தனைகளை முறையாக தடுப்பதோடு, சட்டத்தை வளைத்து செய்யப்படும் முறைகேடுகளை தவிர்க்கமுடியும். பினாமி சொத்துக்களை முறைப்படி பறிமுதல் செய்வதற்கான உரிமையை அரசு இந்த திருத்தத்தின் மூலம் பெறும். அதோடு குடிமக்கள் அனைவரும் சமம் என்பதும் நிறுவப்படும். எனினும் வருமான பிரகடன திட்டத்தின் கீழ் தங்கள் பினாமி சொத்துக்களை வெளிக்கொணர்வோருக்கு இந்த சட்டம் விதிவிலக்கு அளிக்கும்.