Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2016-17 –ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட் குறித்து பிரதமரின் கருத்து


வளர்ந்து வரும் நாட்டின் துடிப்பான ரயில்வேக்களுக்கான நன்கு சிந்தித்து உருவாக்கப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்த்து குறித்து ரயில்வே அமைச்சர் திரு. சுரேஷ் பிரபுக்கு எனது பாராட்டுதல்கள்.

இந்த பட்ஜெட் வறியோருக்கு கௌரவத்தையும், மகளிருக்கு கண்ணியத்தையும் இளைஞர்களுக்கு ஆர்வத்தையும் நடுத்தர மக்களின் மகிழ்ச்சியையும் தர முனைந்துள்ளது.

இந்த பட்ஜெட் எதிர்காலத்துக்கு நம்பிக்கை ஊட்டும் அணுகுமுறையை அளித்துள்ளது. அதே சமயம் சென்ற ஆண்டு பட்ஜெட்டில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பற்றிய முழு விவரத்தையும் தந்துள்ளது. கடந்த ஓர் ஆண்டில் நாம் எவ்வளவோ சாதித்துள்ளோம். இந்த பட்ஜெட் இதனை மேலும் சிறந்ததாக மாற்றும் ஒரு முயற்சி.

கடந்த இரண்டு ஆண்டுகளின் பட்ஜெட்டுகளின் தூய்மை பயணியர் வசதி மேம்பாடு, தொழில்நுட்ப மேம்பாடு ஆகியன அடிப்படையாக அமைந்துள்ளன. மேலும் ரயில்வே திட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன என்ற நிலை இல்லாமல் செயல்பாட்டிற்கு வந்துள்ளன என்ற நிலை உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்தக் கொள்கை மாற்றம் ஒரு அடிப்படை மாற்றம் என நம்புகிறேன். ஏழை மக்களுக்கான அதி விரைவு ரயில் சிறப்பு ஏற்பாட்டின்படி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் தொடங்குவது, தீன் தயாளு ரயில் பெட்டிகள் இணைப்பது ஆகியன நமது அரசு ஏழைகளின் நலத்தில் நாட்டம் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

தேசிய பொருளாதாரத்தில் இந்த பட்ஜெட் நீண்டகால நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ரயில்வேயில் திறம்பட்ட அமலாக்கம், அதிகரிக்கப்பட்ட மூலதன முதலீடுகள், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் இது சாத்தியமாகிறது.

நாட்டின் பின்தங்கிய பகுதிகளில், குறிப்பாக வடகிழக்கு பகுதியில், இணைப்புகளை மேம்படுத்த அரசின் உறுதி மொழியை நிறைவேற்றுவதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் நமது ரயில் தடங்கள் திறன் குறைவு காரணமாக சந்திக்கும் நெடுங்கால பிரச்சனைக்கு கடந்த ஓர் ஆண்டில் பெரிய அளவில் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த ரயில் பட்ஜெட் இந்த நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தி உள்ளது.

திரு. சுரேஷ் பிரபுக்கு முந்தைய ரயில்வே பட்ஜெட்டுகளை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றை நான் குறை கூற விரும்பவில்லை. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் முந்தைய அரசின் பட்ஜெட்டுகளை பார்க்கும் போது திரு. சுரேஷ் பிரபுவின் பட்ஜெட் பெரிய அளவில் முன்னேறி 2.5 மடங்கு உயர் முதலீட்டை எடுத்துக்காட்டியுள்ளது. நாட்டின் புதுமைப்பாட்டை நோக்கிய முக்கியக் கருவியாக விளங்குகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நமது ரயில்வே துறையின் விரிவாக்கத்தில் மாநில அரசுகளும் ஆர்வத்துடன் பங்கேற்கின்றன என்பது தான் இந்த வகையில் விரிவான திட்ட வரைபடமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளுடன் பயணியர் மற்றும் ரயில்வே ஊழியர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்கான நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. செலவினத்தில் கட்டுப்பாடு, நிர்வாகத்தில் திறமை, நுகர்வோருக்கு பொறுப்பேற்கும் தன்மை ஆகிய நமது அரசின் முக்கியக் கவனம் பெறும் விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் எதிரொலிக்கின்றன.

ரயில்வே அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு, ரயில் குடும்பம் மற்றும் ரயில்வே அணிக்கு எனது பாராட்டுக்கள்.

உங்கள் அனைவருக்கும் நன்றி.


***