பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி நாளை (2018 ஆகஸ்ட் 11) மும்பைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
பம்பாய் ஐ.ஐ.டி-யின் 56-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்துகிறார்.
பட்டமளிப்பு விழாவுக்கு பின்னர் எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, புதிய கட்டிடம் மற்றும் ஐ.ஐ.டி-யில் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் மையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.