பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆட்டிசம், பெருமூளை வாதம், மனவளர்ச்சி குன்றிய மற்றும் பல மாற்றுத்திறன்கள் கொண்டவர்களின் நலனுக்கான நேஷனல் டிரஸ்ட் சட்டம் 1999ல் 4 (1) மற்றும் 5 (1) பிரிவுகளில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நேஷனல் டிரஸ்ட் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகளாக நிர்ணயிக்க இந்தத் திருத்தங்கள் வகை செய்கின்றன.
நேஷனல் டிரஸ்ட் தலைவராக இருப்பவர் மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும், அடுத்து வரக் கூடியவர் முறைப்படி நியமிக்கப்படும் காலம் வரையில் அந்தப் பதவியில் தொடருவதற்கு, நேஷனல் டிரஸ்ட் சட்டம் 1999-ன் பிரிவு 4 (1) வகை செய்கிறது. தலைவர் தனது பதவியை ராஜிநாமா செய்தால், அடுத்து வரக் கூடியவர் அரசால் முறைப்படி நியமிக்கப்படும் காலம் வரையில் அந்தப் பதவியில் தொடருவதற்கு, சட்டத்தின் பிரிவு 5 (1) வகை செய்கிறது. சட்டத்தில் இப்போதுள்ள வார்த்தைகள் காரணமாக, அடுத்து வரக் கூடிய தகுதியானவர் தேர்வு செய்யப்பட முடியாத சமயங்களில், பதவியில் உள்ள தலைவரே காலவரையின்றி அதே நிலையில் தொடர முடிகிறது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள், இந்த நிலையைத் தவிர்க்கும். எனவே, பதவியில் இருக்கும் யாரும், கூடுதல் காலத்துக்கு அதே பதவியில் நீடிக்கும் வாய்ப்பு நீக்கப்படுகிறது.
******