Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

SEBI மற்றும் FSC இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு (MoU) மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய செக்யூரிட்டிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போர்டுக்கும் (SEBI), ஜிப்ரால்டரைச் சேர்ந்த நிதிச் சேவைகள் கமிஷனுக்கும் (FSC) இடையில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இரு ஒழுங்காற்று அமைப்புகளுக்கும் இடையில் பொருளாதாரத் தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவுவதாக இருக்கும். இரு நாடுகளிலும் செயல்திறன்மிக்க வகையில் செக்யூரிட்டிகளுக்கான (முதலீட்டு உரிமைகள்) மார்க்கெட்டுகளை உருவாக்குவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகவும் இருக்கும். கையெழுத்திடும் இரு தரப்பாருக்கும் இடையில் தகவல் பரிமாற்றத்துக்கான வரையறையை வலுப்படுத்துவதில் பங்களிப்பு செய்வதாகவும் இது இருக்கும். SEBI மற்றும் ஜிப்ரால்டர் FSC இடையில் கடல்கடந்த பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் ஒழுங்காற்று நடவடிக்கைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

******