Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2020, 2024 மற்றும் 2028 ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளுக்கு வீரர்களை தயார் செய்ய சிறப்பு குழு தலைமையில் விரிவான செயல் திட்டம் – பிரதமர் அறிவிப்பு


மத்திய அமைச்சர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2020, 2024 மற்றும் 2028 ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறந்த முறையில் பங்கேற்க சிறப்பு குழுவின் பரிந்துரையின்படி விரிவான செயல் திட்டம் அமைக்கப்படும் என்றார்.

இந்த குழு விளையாட்டுக்கு தேவையான வசதிகள், பயிற்சி, தேர்வு முறை மற்றும் அவை சார்ந்த விஷயங்களுக்கு தேவையானவற்றை வழங்கும்.

உள்நாட்டு நிபுணர்கள் மற்றும் பிற நாடுகளை சார்ந்த நிபுணர்களும் இந்த குழுவில் இடம்பெற உள்ளனர்.

அடுத்த சில நாட்களில் இந்த சிறப்பு குழு அமைக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.