பி.எம்.இந்தியா
அவசரநிலை பிரகடனத்தின் போது, மக்களின் சுதந்திரம், விருப்பங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை குறித்து, மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் எழுதிய கட்டுரை ஒன்றை இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
சேவைத் திருவிழா, விடுதலைப் பெருவிழாக் கொண்டாட்டங்கள் போன்ற மத்திய அரசின் முன்முயற்சிகள், வரலாற்று விழிப்புணர்வை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள், கலாச்சார நினைவுகளைப் பாதுகாப்பது, நாட்டுப் பற்று உணர்வை மேம்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவை மூலம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை எவ்வாறு வலுப்படுத்துகின்றன என்பதை அந்தக் கட்டுரை எடுத்துக்காட்டுகிறது என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
நாடு ஜனநாயகப் படுகொலை தினத்தை நினைவுகூரும் வேளையில், மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் எழுதியுள்ள கட்டுரையில், அவசரநிலை மக்களின் சுதந்திரத்தையும், விருப்பங்களையும் எவ்வாறு பாதித்தது என்பது குறித்து விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
சேவைத் திருவிழா, விடுதலைப் பெருவிழாக் கொண்டாட்டங்கள் போன்ற மத்திய அரசின் முன்முயற்சிகள், வரலாற்று விழிப்புணர்வை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள், கலாச்சார நினைவுகளைப் பாதுகாப்பது, நாட்டுப் பற்று உணர்வை வலுப்படுத்துவது போன்றவற்றின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை வலுப்படுத்துகின்றன என்று அவர் எடுத்துரைத்துள்ளார்.
***
(Release ID: 2277730)
SS/SV/RJ
As the nation commemorates #SamvidhanHatyaDiwas, Union Minister Shri @gssjodhpur reflects on the Emergency and how it affected the freedoms and aspirations of the people.
— PMO India (@PMOIndia) June 25, 2026
He emphasises that the government's initiatives, such as Seva Parv and Azadi Ka Amrit Mahotsav, reinforce… https://t.co/29pMmaZQky