பி.எம்.இந்தியா
தில்லியின் சத்யா நிகேதனில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்தார். மேலும், சம்பவ இடத்தில் அதிகாரிகள் முழுவீச்சில் பணியாற்றுவதாகவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“தில்லியின் சத்யா நிகேதனில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்: பிரதமர் @narendramodi”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307231®=3&lang=1
—-
TV/BR/GS
The collapse of a building at Satya Niketan, Delhi is distressing. Condolences to those who lost their loved ones. Praying for the speedy recovery of the injured. Authorities are working at the site and assisting those affected in the mishap: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 6, 2026