Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அசோக் சிங்கால்–ன் ஆன்மீக, சமூக ஒற்றுமைக்கான அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டிய பிரதமர் அவருக்கு மரியாதைச் செலுத்தினார்


மறைந்த அசோக் சிங்கால்-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதைச் செலுத்தினார். அவரது, உறுதியான நம்பிக்கை, எளிமை, சமூக ஒற்றுமைக்கான உறுதியான அர்ப்பணிப்பு போன்ற பண்புகளை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அமைப்பு ரீதியான அவரது அயராதப் பணிகளை நினைவுகூர்ந்த பிரதமர்  அவரது வாழ்க்கை, எண்ணங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றையும் பகிர்ந்துள்ளார்

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தொடர்ச்சியாக வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

அசோக் சிங்கால் வலிமைமிக்கவர்…         உறுதியான நம்பிக்கை, எளிமையான வாழ்க்கை முறையைக் கடைபிடித்தவர்.

அவரது ஆன்மீக உறுதிப்பாட்டை அயராத அமைப்புப் பணிகளுடன், சமூக ஒற்றுமைக்கான அசைக்க முடியாத ஈடுபாட்டுடனும் இணைத்திருந்தார்.

அவருக்கு அஞ்சலி செலுத்தி  ஒரு கட்டுரையை எழுதியுள்ளேன்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2315740&reg=48&lang=2

***

SS/SV/PS/SH