இந்திய வர்த்தக, தொழில்துறை கூட்டமைப்பின் (ஃபிக்கி) ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் ஆண்டு மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி பாரத் மண்டபத்தில் 2026 நவம்பர் 19 அன்று காலை 11 மணியளவில் தொடங்கிவைத்து உரையாற்றுகிறார்.
பாரத் 2047 என்ற தலைப்பில் நடைபெறும் இம்மாநாட்டில் தொழில்துறை தலைவர்கள் தலைமைச் செயலதிகாரிகள், தூதர்கள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட 2,500-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 2026 – 27-ம் ஆண்டு ஃபிக்கியின் நூற்றாண்டாகும். இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 2027-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதியுடன் நூறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதார கொள்கை உருவாக்கத்தில் மிகக் குறைந்த பிரதிநிதித்துவம் இருந்த தருணத்தில் 1927-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஃபிக்கி உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியப் பொருளாதார மாற்றத்திலும், உலக பொருளாதாரத்துடன் இந்தியா மேலும் ஒருங்கிணைந்து வளர்வதிலும் ஃபிக்கி முக்கிய பங்காற்றியுள்ளது.
தற்போது பொதுத்துறை, தனியார் துறை, பன்னாட்டு நிறுவனங்கள் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2.5 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்களை ஃபிக்கி கொண்டுள்ளது. இது நேரடியாகவும், மாநில, பிராந்திய அளவிலும் அதனுடன் இணைந்துள்ள 300-க்கும் அதிகமான தொழில்சங்கங்கள் மூலமாகவும் செயல்படுகிறது. அத்துடன் 100-க்கம் மேற்பட்ட நாடுகளில் உள்ள 250 தேசிய வணிக சங்கங்களுடன் கூட்டாண்மை ஒப்பந்தங்களையும் கொண்டுள்ளது.
***
(Release ID: 2337901)
SK/IR/SM/PS