Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் (FTP) 2004 – 09 –ன் கீழ் டார்கெட் பிளஸ் திட்டம் (TPS) தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல்


டார்கெட் பிளஸ் திட்டம் (TPS) 2004-09 தொடர்பாக சிவில் விண்ணப்பம் எண் 554, 2006ல் 27 அக்டோபர் 2015-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மாண்புமிகு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக TPS-ன் கீழ் ஏற்படும் வருவாய் தாக்கம் சுமார் ரூ.2700 கோடியாக இருக்கும்.

2005-06 ஆம் ஆண்டுக்கு FTP-ன் கீழ் ஆரம்பத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட TPS-ன் விதிகளின் கீழும், மற்றும் நாடு முழுக்க உள்ள வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2004-09ன் விதிகளின்படியும் தகுதியுள்ள விண்ணப்பித்த ஏற்றுமதியாளர்கள் அனைவருக்கும் இதன் பயன் விரிவுபடுத்தப்படும்.
டார்கெட் பிளஸ் திட்டம் (TPS) 2005-06 ஏற்கெனவே பகுதியளவு அமல்படுத்தப் பட்டுள்ளது. இருந்தபோதிலும், முன்தேதியிட்ட அறிவிக்கை காரணமாக, மறுக்கப்பட்ட உரிமை கோரிக்கைகள், உச்ச நீதிமன்றத்தால் CA எண் 554, 2006-ன்படியான அறிவுறுத்தலின்படி இப்போது பைசல் செய்யப்படும். இந்தத் திட்டம் 01.04.2006 தேதியில் இருந்து தொடரப்படவில்லை.

20.02.2006 தேதியிட்ட அறிவிக்கை எண் 48 மற்றும் 12.8.2006 தேதியிட்ட அறிவிக்கை எண் 8 தேதிகள் வரையிலான முதன்மை அறிவிக்கைகளின்படி உரிமை கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும். கேட்புகளை பரிசீலிப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் வருவாய்த் துறையின் ஆலோசனையுடன் DGFT தலைமையகத்தால் உருவாக்கப்படும். அமைச்சரவை ஒப்புதல் அளித்த தேதியில் இருந்து ஓராண்டுக்குள் இதை முடிக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது.

அரசிடம் உள்ள பன்மையான சட்ட முறையீடுகளுக்கு இந்த சரியாக்கல் நடவடிக்கை ஒரு முடிவை ஏற்படுத்தும். TPS-ன் கீழான உரிமை கோரிக்கைகள் வெளிநாட்டுக் கொள்கையின் முதன்மையான விதிகளின்படி அளிக்கப்படும். மாண்புக்குரிய உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு கட்டுப்படும் வகையில் இது செய்யப்படும்.

பின்னணி

DGFT vs கனக் ஏற்றுமதியாளர்கள் & Ors, 2006/554 என்ற தலைப்பிட்ட சிவில் அப்பீலில், மாண்புக்குரிய உச்ச நீதிமன்றம் 27.10.2015 தேதியிட்டு அளித்த தீர்ப்பில், ஏற்றுமதி மேம்பாட்டுக்கான டார்கெட் பிளஸ் திட்டம் பற்றி தீர்ப்பளித்துள்ளது. டார்கெட் பிளஸ் திட்டத்துடன் (TPS) தொடர்புடைய பிப்ரவரி 20, 2006 தேதியிட்ட அறிவிக்கை எண் 48ய2005 (சில பொருட்கள் தகுதியற்றவையாக ஆக்கப்பட்டிருந்தன) மற்றும் ஜூன் 12, 2006 தேதியிட்ட அறிவிக்கை எண் 8/2006 (முந்தைய 5, 10 மற்றும் 15% என்ற கட்டணத்தில் இருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டது) ஆகியவற்றை முந்தைய தேதியிட்டு அமல் செய்ய முடியாது. மற்றும் அவை வெளியிடப்பட்ட தேதியில் இருந்துதான் அமலுக்கு வரும்.