பி.எம்.இந்தியா
இந்திய கட்டமைப்பு நிதி நிறுவனத்திற்கு முதலீட்டு தொகையாக ரூ.2600 கோடிக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2007 – 2008ம் நிதி ஆண்டில் இருந்து 2012 – 2013 வரையிலான மானிய கோரிக்கையின் அடிப்படையில் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இது வழங்கப்பட்டுள்ளது.
மானிய கோரிக்கையின் ஒப்புதலினாலும் நிதி அமைச்சரின் ஒப்புதலினாலும் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக இந்த முதலீட்டு தொகை வழங்கப்பட்டது.
பின்னணி:
முழுக்க முழுக்க இந்திய அரசிற்கு சொந்தமான இந்திய கட்டமைப்பு நிதி நிறுவனம் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி நிறுவப்பட்டது. நிறுவனங்கள் சட்டம் 1956ன் அடிப்படையில் இந்த நிறுவனம் துவக்கப்பட்டது. ரூ.1000 கோடி முதலீட்டில் துவக்கப்பட்ட இந்நிறுவனம் 2006 ஆண்டு ஏப்பரல் முதல் செயல்பட துவங்கியது. இந்திய கட்டமைப்பு நிதி நிறுவனம் செயல்படுத்ததக்க உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான நீண்டகால கடன் உதவிகளை அளிக்கிறது.