பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கொச்சி மெட்ரோ ரெயில் சேவையை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்து புதிய மெட்ரோ ரெயிலில் சிறிது தூரம் பயணம் செய்தார். அதன்பின்னர் அவர் கொச்சி மெட்ரோவை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க திரண்டிருந்த பெருந்திரளான மக்களிடையே உரையாற்றினார்.
பிரதமரின் உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
கொச்சி மெட்ரோவின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கு கொள்வது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கொச்சி நகர மக்களுக்கு எனது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே!
அரபிக் கடலின் ராணியாகிய கொச்சி நகரம் நறுமணப்பொருட்களின் முக்கியமான வர்த்தக மையமாகும். இன்று அது கேரளாவின் வணிகத் தலைநகராகவும் அறியப்படுகிறது. கேரளாவிற்கு வரும் சர்வதேச, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கையில் கொச்சி முதலிடத்தில் உள்ளது. எனவே கொச்சி நகருக்கு மெட்ரோ ரயில் வசதி என்பது மிகவும் பொருத்தமான ஒன்றே ஆகும்.
நகரத்தின் மக்கள்தொகையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. 2021ஆம் ஆண்டிற்குள் அது 23 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நகரக் கட்டமைப்பின் மீதான நெருக்கடி அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில் அதனைச் சமாளிக்க துரித போக்குவரத்து முறை மிகவும் அவசியமானதாக உள்ளது. கொச்சியின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது பங்களிப்பதாக இருக்கும்.
இந்தச் சேவையை வழங்கும் கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் இந்திய அரசு, கேரள மாநில அரசு ஆகியவை சமமாக முதலீடு செய்துள்ள நிறுவனமாகும். கொச்சி மெட்ரோவிற்காக மத்திய அரசு இதுவரை ரூ. 2000 கோடிக்கும் மேலான நிதியை வழங்கியுள்ளது. இன்று துவங்கப்பட்டுள்ள முதல் கட்டமான அலுவாவில் இருந்து பளரிவோட்டம் வரை செயல்படுவதாக இருக்கும். இது 11 ரயில் நிலையங்களைக் கொண்டதாக 13.26 கி.மீ. நீளம் கொண்டதாக இருக்கும்.
இந்த மெட்ரோ திட்டம் பல குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது.
“தகவல் தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாட்டு சைகை முறை” என்று கூறப்படும் நவீன சைகை முறையைக் கொண்ட முதல் மெட்ரோ திட்டமாக இது விளங்குகிறது.
இதன் தொடர்வண்டிகளும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளன. சென்னைக்கு அருகே அல்ஸ்தாம் என்ற பிரெஞ்சு நாட்டு நிறுவனத்தின் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர் வண்டிகளின் பாகங்களில் 70 சதவீதம் இந்தியப் பொருட்களையே கொண்டதாக அமைந்துள்ளன.
கொச்சி மெட்ரோ நகரத்தின் பொதுப் போக்குவரத்து வலைப்பின்னல் முழுவதையும் ஒரே அமைப்பாக ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. இந்த அமைப்பு பொதுவான நேர அட்டவணை, பொதுவான டிக்கெட் வழங்கல் முறை, மத்தியப்படுத்தப்பட்ட ‘கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வசதி’ ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும். நகரத்தின் உட்பகுதியில் மோட்டாரினால் இயங்காத போக்குவரத்து அமைப்புகள் மற்றும் கடைசி பகுதி வரையிலான தொடர்பு வசதி ஆகியவற்றின் மீதும் இது கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது.
புதுமையான அரசு-தனியார் கூட்டணி முறையை அறிமுகப்படுத்துவதிலும் கொச்சி மெட்ரோ முன்னோடியாகத் திகழ்கிறது. தானியங்கி கட்டண வசூல் முறையில் முதலீடு செய்வதற்கென ஒப்பந்தப் புள்ளி மூலம் பங்கெடுக்க இந்திய வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் வங்கி தனது வங்கியின் பெயரிலேயே கொச்சி மெட்ரோவிற்கான கட்டண அட்டை மற்றும் அதற்கான கைபேசி செயலி ஆகியவற்றை கூட்டாக அறிமுகப்படுத்தும்.
கொச்சி-1 அட்டை என்று அழைக்கப்படும் இந்த அட்டை பலவகையான நோக்கங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலானதாக, முன்கூட்டியே கட்டணம் செலுத்தப்பட்ட, தேய்க்கத் தேவையில்லாத, ரூபே அட்டை என்றும் இந்த அட்டையை மெட்ரோவில் பயணம் செய்வதற்கு மட்டுமின்றி, சாதாரண கணக்கிலிருந்து கழித்துக் கொள்ளும் வகையிலான டெபிட் அட்டையாகவும் செயல்படும் என்றும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய மிக நவீனமான திறந்த வகை அறிவுசால் அட்டையை இந்தியாவில் முதல் முறையாகவும், உலகத்தில் இத்தகைய அட்டையைப் பயன்படுத்தி வரும் சில நகரங்களில் ஒன்றாகவும் கொச்சி விளங்கவிருக்கிறது. இந்த அட்டையை பேருந்துகள், வாடகை ஊர்திகள், ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
கொச்சி -1 கைபேசி செயலியும் கூட நீண்ட கால நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் நான் அறிந்து கொண்டேன். இந்தச் செயலியுடன் மின்னணு பணப்பை ஒன்றும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இது கொச்சி-1 அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் இது கொச்சி நகர மக்கள் மெட்ரோ சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள உதவும். எதிர்காலத்தில், அவர்களின் அனைத்து போக்குவரத்து தொடர்பான தேவைகள், தொடர்ந்து செலுத்த வேண்டிய தொகைகள், நகரம் மற்றும் சுற்றுலா தொடர்பான தகவல்கள் ஆகியவற்றையும் அது வழங்குவதாக அமைந்திருக்கும். எனவே இது டிஜிட்டல் தளத்தில் மின்னணு முறையிலான நிர்வாகத்தின் மிகச்சிறந்த உதாரணமாகவும் திகழ்கிறது. இத்திட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், கொச்சி மெட்ரோ ரயில் அமைப்பின் வேலை செய்வதற்கென சுமார் ஆயிரம் பெண்களும் 23 திருநங்கைகளும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்பதே ஆகும்.
சுற்றுச் சூழலுக்கு உகந்த வளர்ச்சி என்பதற்கு உதாரணமாகவும் இத்திட்டம் திகழ்கிறது. இத்திட்டத்திற்குத் தேவையான மொத்த எரிசக்தித் தேவைகளில் கிட்டத்தட்ட 25 சதவீத எரிசக்தி மறுசுழற்சி ஆதாரங்களின் மூலம் பெறப்பட்ட, குறிப்பாக சூரிய ஒளியிலிருந்து பெறப்பட்ட மின்சக்தியாக இருக்க திட்டமிடப்பட்டுள்ளது. கரியமில வாயுவை முற்றிலுமாக வெளியிடாத நகர்ப்புற போக்குவரத்து அமைப்பாக மாறுவது என்பதும் இதன் நீண்ட கால நோக்கமாகும். இந்த மெட்ரோ அமைப்பில் உள்ள ஒவ்வொரு ஆறாவது தூணும் நீளவாக்கிலான தோட்டத்தினால் முற்றிலும் சூழப்பட்டதாக அமைந்துள்ளது. இந்த ஏற்பாடு நகரத்தின் திடக்கழிவை பெருமளவிற்கு பயன்படுத்திக் கொள்வதாகவும் இருக்கும்.
இந்திய பசுமை கட்டிடங்களுக்கான கவுன்சில் வழங்கி வரும் மிக உயர்ந்த சான்றிதழான ப்ளாட்டினம் தரத்தை கொச்சி மெட்ரோவின் அனைத்து நிலையங்களும் செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையமும் பெற்றுள்ளன என்பதும் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
நண்பர்களே!
கடந்த மூன்று வருடங்களாக, எனது அரசு நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பு மேம்பாட்டின் மீது சிறப்பான கவனம் செலுத்தி வந்துள்ளது. ரயில்வே, சாலைகள், மின்சாரம் ஆகியவை எமது முன்னுரிமை பெற்ற பகுதிகள் ஆகும். பிரகதி கூட்டங்களில் ரூ. 8 லட்சம் கோடி மதிப்பிலான கிட்டத்தட்ட 175 திட்டங்களை நானே நேரடியாக பரிசீலனை செய்திருக்கிறேன். அவற்றில் ஏற்படும் இடையூறுகளையும் தீர்த்திருப்பதோடு, இத்துறைகளில் திட்டங்களை அமல்படுத்துவதன் சராசரி விகிதத்தை கணிசமான அளவிற்கு அதிகரித்தும் உள்ளோம். இப்போது ஏற்பாட்டு வசதிகள், டிஜிட்டல், எரிவாயு உள்ளிட்ட அடுத்த தலைமுறை கட்டமைப்பில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
பொதுமக்களுக்கான போக்குவரத்தை, குறிப்பாக நகரங்களில், மேம்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்துறையில் அந்நிய முதலீட்டிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் 50 நகரங்கள் மெட்ரோ ரயில் திட்டங்களை அமல்படுத்தத் தயாராக உள்ளன.
மெட்ரோ ரயில் அமைப்பின் பொருளாதார, சமூக ரீதியான பயன்கள் நன்கு அறிந்தவைதான். இத்துறையில் கொள்கையை உருவாக்குவதையும் நாங்கள் விரைவுபடுத்தியுள்ளோம். மெட்ரோ ரயிலுக்கான வண்டித் தொடர்கள், சைகை முறைகள் ஆகியவற்றுக்கான திட்ட விவரங்களை இந்திய அரசு சமீபத்தில் தரப்படுத்தப்படுத்தியுள்ளது. இது நீண்ட கால கண்ணோட்டத்துடன் இந்தியாவில் உற்பத்தி வசதிகளை நிறுவுவதற்கு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும். ‘இந்தியாவில் உற்பத்தி செய்’ என்ற தொலைநோக்கிற்கு இணங்க மெட்ரோவிற்கான வண்டித் தொடர்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
நண்பர்களே!
மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை, நிலப்பயன்பாடு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை ஒருங்கிணைப்பது போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் நகரத்திற்கான திட்டமிடலில் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது.
இந்த நோக்கத்துடன் 2017 ஏப்ரலில் இந்திய அரசு தேசிய இடம்பெயர் நோக்கத்துடன் கூடிய வளர்ச்சிக்கான கொள்கையை அறிவித்துள்ளது. இந்தக் கொள்கை நகரங்களை இடம்பெயர்வை நம்பியிருப்பதாக இல்லாமல் இடம்பெயர்வு சார்ந்ததாக மாற்ற முனைகிறது. கட்டுக் கோப்பான நடந்தே செல்லக்கூடிய மக்கள் குடியிருப்புகளை உருவாக்குவதையும், இந்த இடம்பெயர்வுக்கு நெருக்கமாக மக்களுக்கான போக்குவரத்தைக் கொண்டுவருவதையும் அது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மதிப்பைக் கையகப்படுத்தும் நிதிக் கொள்கைக்கான கட்டமைப்பு என்ற முறையை உருவாக்கியதற்காக வெங்கையா ஜி தலைமையிலான நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தையும் நான் பாராட்டுகிறேன். இது நிலத்திற்கான மதிப்பை அதிகமாகப் பெறும் வகையில் செயல்முறையை வழங்குகிறது.
இந்த மிக முக்கியமான திருப்புமுனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள கொச்சி நகர மக்கள், கொச்சி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், கேரள மாநில முதல்வர் ஆகியோருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதோடு எனது உரையை நிறைவு செய்கிறேன். 2016ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற அறிவுசால் நகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் சுற்றின் சவாலான செயல்முறையின்போதே கொச்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. வரும் நாட்களில் அது மேலும் சிறப்பாகச் செயல்படும் என்றும் நான் நம்புகிறேன்.
நன்றி. வணக்கம்.
*****
PM @narendramodi and other dignitaries on board the Kochi Metro. pic.twitter.com/85dG4EhkqL
— PMO India (@PMOIndia) June 17, 2017
Futuristic infrastructure that will contribute to India's growth...PM @narendramodi and other dignitaries on the Kochi Metro. pic.twitter.com/TA2TWlm3wp
— PMO India (@PMOIndia) June 17, 2017
Kochi, the queen of Arabian Sea was once an important spice trading centre. Today it is known as the commercial capital of Kerala: PM Modi
— PMO India (@PMOIndia) June 17, 2017
Kochi Metro Rail Limited is a 50-50 Joint Venture of GoI & Govt of Kerala. Union Government has so far released over Rs 2000 crore: PM Modi
— PMO India (@PMOIndia) June 17, 2017
The coaches reflect “Make in India” vision. They have been built by Alstom near Chennai, and have an Indian component of around 70%: PM
— PMO India (@PMOIndia) June 17, 2017
Over the last three years, my Government has placed special focus on overall infrastructure development of the nation: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 17, 2017
In PRAGATI meetings, I have personally reviewed nearly 175 projects worth more than eight lakh crore rupees & resolved bottlenecks: PM Modi
— PMO India (@PMOIndia) June 17, 2017
We are also focusing on next generation infrastructure, which includes logistics, digital and gas: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 17, 2017
There is need to bring about a paradigm shift in urban planning by adopting a people-centric approach & integrating land-use & transport: PM
— PMO India (@PMOIndia) June 17, 2017
Kochi was selected as a Smart City in Round 1 of the challenge in January 2016. I hope it will do even better in the days to come: PM Modi
— PMO India (@PMOIndia) June 17, 2017