Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு. நரேஷ் சந்திரா மறைவிற்கு பிரதமர் இரங்கல்


முன்னாள் குடிமை பணியாளர் திரு. நரேஷ் சந்திரா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“திரு. நரேஷ் சந்திரா தலை சிறந்த குடிமை பணியாளர் ஆவார். அரசாட்சி முறை மற்றும் கொள்கைகள் தொடர்பான விஷயங்களில் அழியாத அடையாளமாய் இருப்பவர். அவரது மறைவு வருத்தத்தை அளிக்கிறது.

அமெரிக்காவின் தூதராக இருந்தபோது அவர் என்னை அழைத்து இரவு விருந்து அளித்தபோது அவருடன் நான் பகிர்ந்து கொண்ட பல ஆழமான விவாதங்கள் இன்றும் என் நினைவில் உள்ளது. வலிமையான இந்தியா – அமெரிக்க நட்பினை அவர் ஆழமாக நம்பினார்”, என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.