பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் சட்டத்தை நிலைநாட்டுவதற்கான அமெரிக்காவின் மைய சட்டத்தை நிலைநாட்டுவதற்கான பயிற்சி மையங்கள் மற்றும் இந்தியாவின் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கழகம் ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட தனது ஒப்புதலை வழங்கியது.
இந்திய-அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் என்ற வகையில் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த இது வழிவகுக்கும்.
இந்த ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் பயிற்சிகளுக்கான தரங்கள், பயிற்சிக்கான பொருட்கள், பயிற்சியாளர்களின் தரம் போன்றவற்றை மேம்படுத்த உதவும். இது நாட்டில் காவல் துறையினரின் செயல்பாட்டை மேம்படுத்துவது, அறிவார்ந்த காவல்துறை என்ற கருத்தாக்கத்தை நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றுக்கு பெருமளவில் உதவுவதாக அமையும்.
பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள், வெளிப்பாடுகள், நாடுகள் கடந்த குற்றங்கள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவது, பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து வளர்ச்சிபெறுவதைத் தடுப்பது என்ற பொதுவான நலனை இந்தியாவும் அமெரிக்காவும் பகிர்ந்து கொள்கின்றன. உள்நாட்டையும், முக்கியமான கட்டமைப்புகளையும், பாதுகாப்பது, பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் உலகளாவிய பொருட்களின் போக்குவரத்தை சீர்குலைப்பதைத் தடுப்பது ஆகியவற்றின் பொதுவான நலன்களையும் இந்தியாவும் அமெரிக்காவும் பகிர்ந்து கொள்கின்றன.
பின்னணி:
2010 நவம்பரில் அமெரிக்க அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, பயங்கர வாதத்திற்கு எதிரான இந்திய-அமெரிக்க முன்முயற்சியின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை என்ற ஏற்பாட்டை உருவாக்குவது என இருதரப்பினரும் ஒப்புக்க்கொண்டிருந்தனர்.
கீழ்க்கண்ட விஷயங்களை உள்ளடக்கிய வகையில் உள்நாட்டு பாதுகாப்பிற்கான பேச்சுவார்த்தைகளின் கீழ் ஆறு துணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன:
1. உலக அளவில் பொருட்களை சப்ளை செய்யும் சங்கிலித் தொடர், போக்குவரத்து, துறைமுகம், எல்லைப்பகுதி மற்றும் கடல்பகுதி ஆகியவற்றின் பாதுகாப்பு.
2. பெருநகரங்களின் காவல் பணிகள் மைய அரசு மற்றும் உள்ளூர் பங்குதாரர்கள் ஆகியோருக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொள்வது.
3. சட்டவிரோத நிதியுதவி, பணம், நிதிசார்ந்த மோசடிகள் மற்றும் போலி பண நோட்டுக்கள் போன்றவற்றை சட்டவிரோதமான வகையில் கடத்துவது.
4. இணையம் தொடர்பான தகவல்கள்.
5. செயல்திறனை அதிகரித்துக் கொள்ளுதல்; மற்றும்
6. தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொள்ளுதல்.
உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான பேச்சுவார்த்தைகளில் அடங்கியுள்ள இந்த ஆறு துணைக்குழுக்கள் தொடர்பாக இந்தியாவில் செயல்பட்டு வரும் சட்டத்தை நிலைநாட்டும் அமைப்புகளின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதை அமெரிக்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக செயல்திறனை வளர்த்தெடுப்பதற்கான துணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் செயல்திறனை வளர்த்தெடுக்கும் விஷயத்தைக் கையாளும் முக்கிய நிறுவனங்களுக்கிடையே கட்டமைப்புடன் கூடிய ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள அமெரிக்காவின் மைய சட்டத்தை நிலைநாட்டுவதற்கான பயிற்சி மையங்கள் மற்றும் இந்தியாவிலுள்ள அதன் மறுபதிப்பான இந்திய காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கழகம் ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க வேண்டும் என அமெரிக்க தரப்பு பரிந்துரை செய்திருந்தது.