Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எஃப்.ஐ.ஜி உலகக் கோப்பைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தீபா கர்மாகருக்கு பிரதமர் வாழ்த்து


சர்வதேச ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் (எஃப்.ஐ.ஜி) உலகக் கோப்பைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை தீபா கர்மாகருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“தீபா கர்மாகரை பார்த்து இந்தியா பெருமை அடைகிறது! துருக்கி நாட்டின் மேர்சினில் நடைபெற்ற சர்வதேச ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் (எஃப்.ஐ.ஜி) உலகக் கோப்பைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி அவரது விடாமுயற்சி மற்றும் ஒருபோதும்-தளர்ந்துவிடாத மனப்பான்மை ஆகியவற்றிற்கான முக்கிய உதாரணமாகும்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

****