பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, புதுதில்லி, பாகர்கன்ஜ், கிருஷ்ணா மார்கெட் பகுதியில் உள்ள ப்ளாட் எண் 17/80ஏ மற்றும் 18/80ஏவுக்கு தென் மேற்கு திசையில் அமைந்துள்ள 82 சதுர மீட்டர் அளவுள்ள நிலத்தை, ராமகிருஷ்ணா மிஷனுக்கு நலப்பணிகளின் ஈடுபடுவதற்காக நடப்பு விலையில் வழங்க ஒப்புதல் அளித்தது.
பின்னணி :
ராமகிருஷ்ணா மிஷன் அமைப்பினர், அவர்கள் தற்போது உள்ள இடத்துக்கு அருகாமையில் உள்ள 82 சதுர மீட்டர் இடத்தை அவர்களின் நலப்பணிகளை விரிவாக்குவதற்காக ஒதுக்குமாறு, மத்திய அரசை கேட்டுக் கொண்டனர். காலியாக உள்ள அந்த இடத்தை, ஆக்கிரமிப்பு செய்யப்படவும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுத்தவும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.