பி.எம்.இந்தியா
நெதர்லாந்து நாட்டின் அரசியும் நிதி ஆரோக்கியத்திற்கான ஐநா பொதுச்செயலாளரின் சிறப்பு ஆலோசகராகவும் இருக்கும் மாக்சிமா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நிதி உள்ளடக்கத்திற்கான உலகளாவிய குரலாக விளங்கும் நெதர்லாந்து நாட்டின் அரசி மாக்சிமாவைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு புரட்சி, நிதிச் சேவைகளை எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கச் செய்கிறது குறித்துத் தாங்கள் விவாதித்ததாகப் பிரதமர் தெரிவித்துள்ளார். இத்தகைய தொழில்நுட்பப் புரட்சி மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கு வழிவகுப்பதுடன், பொதுமக்களுக்குத் அதிகாரம் அளிப்பதாகவும் அவர் விவரித்தார்.
உலகெங்கிலும் உள்ள நட்பு நாடுகளுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியா எப்போதும் உறுதியுடன் இருக்கும் என்றும் பிரதமர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
(Release ID: 2278072)
***
TV/PD/SH
Delighted to meet Her Majesty Queen Máxima of the Netherlands, who is also the UN Secretary General's Special Advocate for Financial Health and a long-standing global voice for financial inclusion.
— Narendra Modi (@narendramodi) June 25, 2026
We discussed how India’s Digital Public Infrastructure led revolution is making… pic.twitter.com/xlbqHwHqBf