பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிலக்கரி அமைச்சகத்தில் நியமன ஆணையம் (இணைச் செயலாளர் அந்தஸத்தில்) 4வது சம்பள வரிசையில் ரூ. 37,400-67,000 மற்றும் வகைச் சம்பளம் ரூ.10,000 உடன் ஒரு பதவியை உருவாக்கவும், அவருக்கு உதவும் வகையில் இதர அலுவலர் மற்று ஊழியர் பதவிகளை உருவாக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டின் நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்)சட்டத்தின் கீழ் தேசிய ஆணையத்தின் அலுவலகம் முறையாக செயல்படுவதற்கு இந்த ஏற்பாடு உதவி செய்யும். இதன் மூலம் அச்சட்டத்தின் நோக்கங்கள் நிறைவேற்றப்பட வழியேற்படும்.
நிலக்கரித் துறையினை பாதிக்கின்ற நிச்சயமற்ற நிலையினை மாற்றுவதற்கும், பொருளாதாரத்தின் முக்கிய துறைகளுக்கு நிலக்கரி கிடைப்பதை மேம்படுத்தவும் இதன் மூலம் நிலக்கரித் துறையானது இன்னும் துரிதமான வேகத்தில் வளர்ச்சி பெறவுமான நியமன ஆணையத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு இந்த பதவி உருவாக்கம் உதவி செய்யும்.
••••••