Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய ஆயுதக் கிடங்கில் தீ விபத்து – பிரதமர் வருத்தம்


மஹராஷ்டிரா மாநிலம் புல்கானில் உள்ள ஆயுதக் கிடங்கில் தீ விபத்தால் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மஹராஷ்டிரா மாநிலம் புல்கானில் உள்ள ஆயுதக் கிடங்கில் தீ விபத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் உள்ளது.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு, நிலைமை குறித்து ஆய்வு செய்யுமாறு கேட்டுள்ளேன் என்று பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.