Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாபா பண்டா சிங் பகதூர்ஜியின் 300வது தியாக தினத்தில் பிரதமர் பங்கேற்பு


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் வரும் ஞாயிறன்று புதுதில்லியில் நடைபெறவுள்ள பாபா பண்டா சிங் பகதூர்ஜியின் 300வது தியாக தின நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறார்.

அந்நிகழ்ச்சியின்போது, பாபா பண்டா சிங் பகதூர்ஜி குறித்த ஒரு நூலையும் நினைவுச் சின்னத்தையும் பிரதமர் வெளியிடுவார்.

பஞ்சாப் மாநில முதல்வர் திரு. பிரகாஷ் சிங் பாதல் அவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார். சமீபத்தில் வெளியிடப்பட்ட பாபா பண்டா சிங் பகதூர்ஜியின் நினைவு நாணயம் இந்த நிகழ்ச்சியின்போது பிரதமருக்கும், பஞ்சாப் முதல்வருக்கும் வழங்கப்படும்.

பிரதமர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவார். இந்த நிகழ்ச்சியின்போது பாபா பண்டா சிங் பகதூர்ஜி மீதான கவிதாஞ்சலிகளும் பாடப்படும்.

***