பி.எம்.இந்தியா
அடுத்த 15 ஆண்டுகளிலும், 21ம் நூற்றாண்டின் அடுத்தடுத்த பத்தாண்டுகளிலும் அடிப்படையான மாற்றத்தை உருவாக்கும் அளவுக்கு செயல்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று நித்தி ஆயோக் அமைப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
நித்தி ஆயோக் அதிகாரிகளோடு உரையாடிய பிரதமர், உலகெங்கும் நிலவிய அடிப்படை மாற்றத்துக்கான காலம் முடிந்து விட்டது என்று கூறினார். தற்போதைய காலகட்டத்துக்கு கூடுதல் முறைமாற்றம் தேவைப்படுகிறது என்றார். கடந்த முப்பதாண்டுகளாக தொழில்நுட்பம் மாற்றத்துக்கான உந்துசக்தியாக விளங்கியதை குறிப்பிட்ட பிரதமர், இந்த மாற்றம் தொடரும் எனறார். மத்திய அரசு மக்களின் வாழ்வில் மேம்பாட்டை ஏற்படுத்தும் அளவிலான மாற்றங்களை உருவாக்கும் துணிவு கொண்டுள்ளது என்றார்.
வரலாற்று ரீதியாக இது வரை இந்தியாவில் கொள்கைகளை வடிவமைத்தவர்கள், அதன் வலிமையில் கவனம் செலுத்தாமல், தடைகள் குறித்தே சிந்தித்து வந்துள்ளனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ச்சிப் பாதை குறித்து பேசிய பிரதமர், இந்தியாவின் மனிதவளம் மற்றும் இயற்கை வளங்களை அறிவார்ந்த முறையில் பயன்படுத்துதல் இந்த மாற்றத்தின் இதயமாக இருக்கும் என்றார். இது குறித்து மேலும் விரிவாக பேசிய பிரதமர், நம்மிடம் உள்ள நிலம் இந்தியாவின் கனிமவளம் மற்றும் பயன்படுத்தப்படாமல் உள்ள சூரியஒளி மின்சாரம் ஆகியவை குறித்தும் குறிப்பிட்டார். இதே போலவே இந்தியாவின் கடற்கரையோரமும் பயன்படுத்தப்படாமல் உள்ளது என்றும் கூறினார்.
மனிதவளம் பற்றி பேசிய பிரதமர், ஒருமுகப்படுத்தப்பட்ட திறன் வளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். உலகின் வருங்கால மனிதவளத் தேவைகளை நிறைவேற்றும் நிலையில் இந்தியா உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் சுற்றுலாத் துறை மேலும் வளர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் சுட்டிக் காட்டினார். மாநிலங்களோடு இணைந்து வளர்ச்சியை மேம்படுத்துவதும், ஏற்றுமதியை அதிகப்படுத்துவதும், குடியாட்சியின் அம்சம் மட்டுமல்ல, அது இந்த நேரத்தின் தேவை என்றார் பிரதமர்.
விவசாயம் குறித்து பேசிய பிரதமர், விவசாய உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதோடு, ஒட்டு மொத்த ஊரக பொருளாதாரத்தை வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். உணவுப் பதப்படுத்துதல், கிடங்குகள் கட்டுதல், தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் ஆகியவை இத்துறைக்கு முக்கியமானவை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கொள்கை முடிவுகளை உருவாக்குபவர்களின் நோக்கம், கொள்கைகளை விட முக்கியமானது என்றார் பிரதமர். நல்ல நிர்வாகத்துக்கான தரவுகளை மேம்படுத்துதல் மற்றும் விபரங்களை சேமிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் வலியுறுத்தினார்.
மானியங்களை விட்டுத்தருதல் மற்றும் தூய்மைத் திட்டங்கள் போன்றவற்றிலிருந்து நித்தி ஆயோக் உத்வேகம் பெற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். தங்களின் தேவைகள் மீதுதான் மக்கள் கவனமாக இருப்பார்கள் என்ற கருத்தை இதிலிருந்து கிடைத்த அனுபவம் பொய்யாக்கி இருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். பொது நன்மைக்காக மக்கள் ஒத்துழைப்பு நல்க தயாராகவே இருக்கிறார்கள் என்றார் பிரதமர்.
திட்டங்கள் துறையின் இணை அமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங், நித்தி ஆயோக் துணைத் தலைவர் திரு அரவிந்த் பனாகரியா மற்றும் நித்தி ஆயோக் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
Interacted with members of @NITIAayog & discussed key policy related issues, crucial for #TransformingIndia. https://t.co/HWjbKnInwc
— Narendra Modi (@narendramodi) July 28, 2016
Areas that were covered in the discussions today include HRD, skill development, agriculture, tourism, energy & coastal development.
— Narendra Modi (@narendramodi) July 28, 2016
Its imperative that we embrace latest technology in our development. World over, technology is guiding several fascinating transformations.
— Narendra Modi (@narendramodi) July 28, 2016