Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அசாமின் கலியாபூரில் நடைபெற்ற காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தடத் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

அசாமின் கலியாபூரில் நடைபெற்ற காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தடத் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


அசாமின் கலியாபூரில் 6,950 கோடி மதிப்புள்ள காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தடத் திட்டத்தின் அடிக்கல்நாட்டு விழாவில் தாம் பங்கேற்றதன் காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டுவது எனக்கு மிகுந்த பெருமையும் அதிர்ஷ்டமும் ஆகும். இது வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முயற்சிகளையும் வலுப்படுத்துகிறது.”

“கலியாபூர் மக்களோடு முழு அசாம் மக்களின் உற்சாகத்தைக் காண முடிகிறது. இது மாநிலத்தின் வளர்ச்சியில் இரட்டை இன்ஜின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மீதான அவர்களின் வலுவான நம்பிக்கையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.”    

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215841&reg=3&lang=1

***

TV/PLM/RK