Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் 3,250 கோடி ரூபாய்க்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவின் காட்சிகளை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் 3,250 கோடி ரூபாய்க்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவின் காட்சிகளை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்


மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் 3,250 கோடி ரூபாய்க்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவின் காட்சிகளை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

மேற்கு வங்க மாநிலம் மால்டாவிலிருந்து, ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்கும் பணிகளில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மேற்கு வங்க மாநிலம் மால்டாவில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவைகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, பயணிகளின் வசதியை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய படியாகும்.

மேற்கு வங்க மாநிலத்தில், மேலும் நான்கு நவீன அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவைகளை பெறுவதற்காக, அம்மாநில மக்களுக்கு எனது வாழ்த்துகள்.

மால்டா ரயில் நிலையத்தில், ஹவுராகுவஹாத்தி நகரங்களை இணைக்கும் படுக்கை வசதி கொண்ட முதலாவது வந்தே பாரத் ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தேன். ரயில் நிலையத்திலும், ரயிலிலும் இருந்த குழந்தைகளுடன் ஒரு இனிமையான கலந்துரையாடலையும் மேற்கொண்டேன்.

***

(Release ID: 2215623)

TV/SV/RJ