Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமைதி, கலாச்சாரம், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு ஆகியவற்றில் அசாம் மாநிலம் கண்டுள்ள கடந்த 11 ஆண்டுகளில் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துரைக்கும் ஒரு கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த 11 ஆண்டுகளில் அமைதி, கலாச்சாரம், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு ஆகியவற்றில் அசாம் மாநிலம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துரைக்கும் ஒரு கட்டுரையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு பபித்ரா மார்கெரீட்டா வெளியிட்டுள்ள பதிவிற்குப் பதிலளிக்கும் வகையில், பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

மத்திய இணை அமைச்சர் திரு பபித்ரா மார்கெரீட்டா, கடந்த 11 ஆண்டுகளில் அமைதி, கலாச்சாரம், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு போன்றவற்றில் அசாம் மாநிலம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது குறித்து விவரித்துள்ளார்.

வளர்ச்சியடைந்த இந்தியா @ 2047 என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, அசாம் மாநிலம் சீரான வளர்ச்சி கண்டு வரும் வேளையில், பொருளாதார வளர்ச்சிக்கும், பொறுப்புணர்வுடன் கூடிய சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் விதமான முன்னேற்றம் குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215555&reg=3&lang=1

***

TV/SV/RJ