Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அடல் பிகாரி வாஜ்பாயின் வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெறும் வகையில் பிரதமர் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்துள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, அடல் ஜி-யின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெறுவதை வலியுறுத்தி ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் இன்று பகிர்ந்துள்ளார்.

“यद्यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनः।

स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते॥”

ஒரு சிறந்த மனிதர் எதைச் செய்கிறாரோ, அதையே சாமானிய மக்களும் பின்பற்றுகிறார்கள் என்பதை இந்த சம்ஸ்கிருத சுபாஷிதம் உணர்த்துகிறது. இதையே, ‘ஒரு தலைவர் அல்லது முன்னோடி நபரின் வழிகாட்டுதல், சமூகத்திற்கும், அவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைகிறது’ என்று கூறலாம்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அடல் ஜி-யின் வழிகாட்டுதல், கண்ணியம், உறுதியான சித்தாந்தம் மற்றும் நாட்டின் நலனை அனைத்திற்கும் மேலான நிலையில் வைத்திருக்கும் அவரது மன உறுதி ஆகியவை இந்திய அரசியலுக்கு ஒரு சிறந்த உதாரணமாக அமைகின்றன. “பதவியால் அன்றி, குணத்தால் தான் சிறப்பு நிலைநாட்டப்படுகிறது என்பதையும், அதுவே சமூகத்திற்கு வழிகாட்டுகிறது என்பதையும் அவர் தனது வாழ்வின் மூலம் நிரூபித்துள்ளார்”.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208351&reg=3&lang=1  

***

AD/SV/RK