Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி


பிரதமர் திரு நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். நல்லாட்சிக்கும், நாட்டைக் கட்டமைப்பதற்கும் அவர் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துள்ளார் என்று திரு மோடி புகழாரம் சூட்டியுள்ளார். “ஒரு சிறந்த பேச்சாளராக மட்டுமின்றி, ஒரு உணர்வுபூர்வ கவிஞராகவும் அவர்  என்றென்றும் நினைவுகூரப்படுவார். அவரது ஆளுமை, பணி, தலைமைத்துவம் ஆகிய பண்புகள் நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து வழிகாட்டியாகத் திகழும்,” என்று திரு மோடி கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நல்லாட்சிக்கும், நாட்டைக் கட்டமைப்பதற்கும் அவர் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்துள்ளார். “ஒரு சிறந்த பேச்சாளராக மட்டுமின்றி, ஒரு உணர்வுபூர்வ கவிஞராகவும் அவர்  என்றென்றும் நினைவுகூரப்படுவார். அவரது ஆளுமை, பணி, தலைமைத்துவம் ஆகிய பண்புகள் நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து வழிகாட்டியாகத் திகழும்,”.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208347&reg=3&lang=1

***

AD/SV/RK