Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கணேஷ் மணி ரத்னம் திருமுருவுக்குப் பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் வில்வித்தை காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கணேஷ் மணி ரத்னம் திருமுருவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான சூழ்நிலையிலும் துல்லியமாகச் செயல்பட்டு, அபாரமான நிதானத்துடனும், தளராத மன உறுதியுடனும் கணேஷ் மணி ரத்னம் திருமுரு நாட்டுக்கு அளவற்ற பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கணேஷ் மணி ரத்னம் திருமுருவின் எதிர்கால முயற்சிகளுக்குப் பிரதமர் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் வில்வித்தை ஒருங்கிணைந்த தனிநபர் வெண்கலப் பதக்கப் போட்டியில் கடுமையாகப் போராடி வெற்றி பெற்ற கணேஷ் மணி ரத்னம் திருமுருவுக்கு வாழ்த்துகள். நெருக்கடியான சூழலிலும் தனது துல்லியமான செயல்பாடு, அபாரமான நிதானம், தளராத மன உறுதியால், கணேஷ் அளப்பரிய பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள்: பிரதமர் நரேந்திரமோடி”

—-

(Release ID: 2317686) 

TV/PLM/SH