Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்குப் பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.

இது மிகச் சிறப்பான செயல்பாடு என்று குறிப்பிட்ட பிரதமர், வித்யாவுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், வருங்காலத்தில் அவர் வெற்றியின் புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் பகிர்ந்துகொண்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

“வித்யா ராம்ராஜ் உண்மையிலேயே மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்! ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். வித்யாவிற்கு வாழ்த்துகள். வரும் காலங்களிலும் அவர் வெற்றியின் புதிய உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்: பிரதமர் @narendramodi”

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316259&reg=3&lang=1

****

TV/BR/SH