Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற குல்வீர் சிங்கிற்குப் பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற குல்வீர் சிங்கிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாக அமைந்திருப்பதால், இந்த வெற்றி கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகத் திகழ்வதாகப் பிரதமர் குறிப்பிட்டார். அவர் குறித்து இந்தியா பெருமிதம் கொள்வதாகவும் திரு மோடி தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற குல்வீர் சிங்கிற்கு வாழ்த்துகள்! இது அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாக அமைந்திருப்பது, அவரது வெற்றியை மேலும் சிறப்பானதாக்குகிறது. அவரது சாதனையால் இந்தியா பெருமிதம் கொள்கிறது: பிரதமர் @narendramodi”

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316256&reg=3&lang=1

****

TV/BR/SH