Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கருக்கு பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த வெற்றி, முரளி ஸ்ரீசங்கருக்கு பதக்க மேடையில் தகுதியான இடத்தைப் பெற்றுத் தந்துள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார். அவரத்து எதிர்கால வெற்றிகளுக்கும் திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

“ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் முரளி ஸ்ரீசங்கருக்கு மற்றுமொரு பதக்கம்!

அவரது செயல்பாடு, ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவில் பதக்க மேடையில் அவருக்கு ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது.

அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் காலங்களில் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்: பிரதமர் @narendramodi”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316247&reg=3&lang=1

****

TV/BR/SH