பி.எம்.இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ட்ராப் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்ற நீரு தண்டாவிற்கப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது அபாரமான துல்லியத்தையும் நிதானத்தையும் பிரதமர் பாராட்டியுள்ளதோடு, அவரது இந்தச் சாதனை நாட்டிற்கு அளவற்ற பெருமையைத் தேடித் தந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்த வரலாற்றுச் சாதனை, மேலும் பல இளம் விளையாட்டு வீரர்களைத் துப்பாக்கிச் சுடும் விளையாட்டில் ஈடுபடவும், மிக உயர்ந்த கௌரவங்களை அடையவும் ஊக்குவிக்கும் என்று திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“நீரு தண்டா இந்தியாவிற்கு ஒரு வரலாற்றுத் தருணத்தை வழங்கியுள்ளார்!
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ட்ராப் துப்பாக்கிச் சுடும் பிரிவில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்ற அவருக்கு வாழ்த்துகள்.
அவரது அபாரமான துல்லியமும் நிதானமும் நாட்டிற்கு அளவற்ற பெருமையைத் தேடித் தந்துள்ளன. இந்தச் சாதனை, மேலும் பல இளம் விளையாட்டு வீரர்களைத் துப்பாக்கி சுடும் விளையாட்டில் ஈடுபடவும், மிக உயர்ந்த கௌரவங்களை அடையவும் ஊக்குவிக்கும்: பிரதமர் நரேந்திரமோடி”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316616®=3&lang=1
(Release ID : 2316616)
****
TV/PLM/SH