Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இங்கிலாந்தில் 2015ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி பிரதமரின் அலுவல்கள்

பிரதமர் திரு. நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் திரு. டேவிட் கேமரூனை இன்று காலை செக்கர்ஸ் என்ற இடத்தில் சந்தித்தார். அவர் ஓக் மரக்கன்று ஒன்றினை நட்டார். பின்னர் இரு தலைவர்களும் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் திரு. டேவிட் கேமரூனும் இங்கிலாந்து-இந்தியா முதன்மை நிர்வாகிகள் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தனது துவக்க உரையில் பிரதமர் கேமரூன், பிரதமர் மோடியின் நெடுநோக்கினையும், இந்தியாவை மாற்றியமைக்கும் அவரது ஆழ்நோக்கத்தையும் பற்றி குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் இரு நாடுகளுக்குமிடையே ஆன வரலாற்றுப் பூர்வ உறவுகளையும், ஒரு நாடு மாற்றத்தை நிறைவு செய்யும் வகையில் அமைத்துள்ள நிலைமையையும் குறிப்பிட்டார். நாடுகளுக்கிடையிலான உறவுகளில் பொருளாதாரத் தொடர்புகள் மிக மிக முக்கியமானவை என்றார். மத்திய அரசின் முயற்சிகளான ‘இந்தியாவில் செய்வோம்’, அடிப்படை வசதித்துறைக்கு முக்கியத்துவம் பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகளை அனுமதித்தல் ஆகியவற்றையும், 2022க்குள் 5 கோடி வீடுகள் கட்டுதல், புதுப்பிக்கக்கூடிய 175 கிகாவாட் எரிசக்தி உற்பத்தி ஆகியவற்றில் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் பற்றிக் குறிப்பிட்டார். இங்கிலாந்து நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதால் இரு நாடுகளுக்கும் வெற்றி-வெற்றி என்ற நிலைமையை அடையும் என்றார்.

இங்கிலாந்து அரசியார் திரு. நரேந்திர மோடிக்கு மதிய உணவு விருந்தளித்தார். இச்சந்திப்பின்போது பரஸ்பரம் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்தியாவின் மிகப் பெரிய பலதரப்புத் தன்மையே அதன் சிறப்பு, கௌரவம் மற்றும் வலிமை என்று கூறினார்.

லண்டன், வெம்பிளி அரங்கில் இங்கிலாந்து பிரதமர் திரு. டேவிட் கேமரூன் முன்னிலையில் பிரிட்டிஷ்-இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய அவர், சீக்கிய சமுதாயத்தினர் அளித்துள்ள பெரிய பங்கினையும், இந்தியாவின் சூஃபி பாரம்பரியத்தையும் குறிப்பிட்டார். நேற்று சீக்கிய சமூகத்தினரிடையே பேசிய நிகழ்ச்சியை நினைவுகூர்ந்த பிரதமர், அவர்களது வேதனையை பங்கிட்டுக் கொள்வதாகவும், அவர்கள் பிரச்சினைகளை நன்கு அறிந்து இருப்பதாகவும் அவற்றைத் தீர்த்து வைக்க பாடுபட்டு வருவதாகவும் கூறினார்.

இந்தியா குறித்த தமது தொலைநோக்கினை தமது ஒரு மணி நேர உரையில் விவரித்த பிரதமர், ராஜஸ்தான் மாநிலத்தின் ஆள்வாரைச் சேர்ந்த இம்ரான்கானையும் அவர் உருவாக்கிய 50 கல்வி செயலிகளையும் அவற்றை அவர் இலவசமாக வழங்கியதையும் குறிப்பிட்டார். ஹரியானா மாநில கிராமத் தலைவர் ஒருவர் எப்படி தனது பெண் குழந்தையைக் காப்போம் பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம் என்ற அழைப்புக்கு பதில் அளிக்கும் வகையில் மகளுடன் செல்பி இயக்கத்தை தொடங்கினார் என்பதையும் அது எவ்வாறு உலக அளவில் வெற்றி பெற்றது என்பதையும் நினைவு கூர்ந்தார். இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் உறுதிபடக்கூடிய அவர், ஏனெனில் தமது இந்தியா பற்றிய தொலைநோக்கு, கல்வி செயலிகளை உருவாக்கி இலவசமாக வழங்கிய இமரான்கானுடைய இந்தியா, இந்தியாவுடன் செல்பி கருத்தை உருவாக்கிய கிராமத் தலைவரின் இந்தியாதான் என்றார். இவர்களைப் போன்ற எண்ணற்ற பலர் இந்தியாவில் உள்ளனர் என்றார் அவர்.

உலகின் அனைத்து பெரிய சமயங்களும் இந்தியாவில் உள்ளன. அதுவும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் என்று பிரதமர் கூறினார். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்த நெறிகளை எங்கு சென்றாலும் உடன் எடுத்துச் செல்லுகின்றனர் என்றும், எனவே அவர்கள் இந்தியாவின் பெருமை மிகு தூதர்கள் என்றும் கூறினார்.

இதுவரை தனது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பிரதமர் எடுத்துரைத்தார். இந்திய மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் திட்டங்கள் பற்றி குறிப்பாக தூய்மை இந்தியா, தூய்மையான எரிசக்தி பற்றிக் குறிப்பிட்டார்.

சிக்கனமான சூரிய சக்தி உற்பத்தி திட்டத்தை தொடரும் வகையில் சூரிய கதிரியக்கம் அபரிமிதமாக உள்ள நாடுகளை ஒருங்கிணைத்து உலக ‘சூரிய சக்தி கூட்டமைப்பை’ இந்தியா முன்னின்று உருவாக்கி நடத்தும் என்று கூறினார்.

*****