Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


இந்தியாவின் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்துக்கும் ஈரானின் பங்குகள் பரிவர்த்தனை அமைப்புக்கும் இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்jத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் பங்குச் சந்தைகள் தொடர்பான விசயங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு ஏற்பட வழிசெய்யப்ப்ட்டுள்ளது.

இந்த இரு நாடுகளின் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கிடையே பொருளாதார இணைப்பு மற்றும் ஒத்துழைப்பு மேலும் மேம்படும். மேலும் இருநாடுகளிலும் பங்குச்சந்தைகளை திறம்பட மேம்படுத்துவதற்கு உரிய சூழ்நிலைகளை உருவாக்குவதும் இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இருநாடுகளுக்கும் இடையே தகவல் பரிமாற்ற கட்டமைப்பை வலுப்படுத்தவும் இது உதவும். இந்தியாவின் செபி ஈரானின் எஸ்.இ.ஓ ஆகியவற்றுக்கிடையே வெளிநாட்டு பரஸ்பர ஒத்துழைப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இந்த ஒப்பந்தம் மதிப்பு கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் செபி ஈரானின் எஸ்.இ.ஓ ஆகியவற்றுக்கிடையே தகவல் பரிமாற்ற கட்டமைப்பை வலுப்படுத்தவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பங்களிக்கும்.