Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா பெல்ஜியம் இடையே எரிசக்தி ஒப்பந்தம்


இந்தியா மற்றும் பெல்ஜியம் அரசிற்கு இடையேயான எரிசக்தி ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறையில் நிறுவன ஒத்துழைப்பு உறவை நிறுவி, தொழில்நுட்பத்தில் இருநாடுகளும் பயன்பெறும் வகையில் ஒத்துழைப்பை கொண்டு வருவதே இதன் நோக்கமாகும். காற்று எரிசக்தி, தொகுப்பு, புவி வெப்ப எரிசக்தி, கடல்சார் எரிசக்தி, விநியோக பன்முகத்தன்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு, இரு நாடுகளும் ஒப்பந்தம் கொண்டுள்ள துறைகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும். இரு நாட்டுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும்.

*****