Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா – வங்காளதேசம் இடையே தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையில், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா-வங்காளதேசம் இடையே ஏற்கனவே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும், வங்காளதேசம் அரசின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பப் பிரிவுக்கும் இடையே கையெழுத்தானது. இது 5 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். அதற்குப் பிறகு, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எந்த நேரத்திலும் நீடிக்கலாம். இருதரப்பும் எழுத்து மூலம், ஒப்புதல் அளிக்கும் காலத்துக்கு நடைமுறையில் இருக்கும். இந்த ஒப்பந்தத்தை எந்த நாடும், மற்ற நாட்டுக்கு 6 மாதத்துக்கு முன்பே எழுத்துமூலம் நோட்டீஸ் அனுப்பி, ரத்து செய்யலாம்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையில் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில்நுட்ப அடிப்படையிலானது. இது மின்-ஆளுமை, மொபைல்-ஆளுமை, மின்னணு முறையில் பொதுமக்களுக்கு சேவை அளித்தல், இணையதள பாதுகாப்பு, திறன் வளர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், வங்காளதேசத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் சந்தையில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்துதல், இந்தியாவில் உள்ள இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு முதலீடுகளைப் பெறுதல் ஆகியவற்றை முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம், மறைமுகமாக வேலைவாய்ப்புகள் ஏற்படும்.

*****