Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி(எக்ஸிம் வங்கி)க்கும் நியூ டெவலப்மண்ட் பேங்கிற்கும்(என்.டி.பி) இடையே பிரிக்ஸ் நாடுகளில் இதர மேம்பாட்டு நிதிநிறுவனங்களுடன் இணைந்து பொது ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


நியூ டெவலப்மண்ட் வங்கிக்கும் இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கிக்கும் இடையே பிரிக்ஸ் அமைப்பின் வங்கிகளுக்கிடையோன ஒத்துழைப்பு அமைப்பு மூலமான புரிந்துணர்வு ஒப்பந்த்த்தில் பொருளாதார விவகாரங்கள் துறையின் அரசுச் செயலாளர் நிலையில் கையெழுத்திடுவதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இந்த ஒப்பந்தம் பிரிக்ஸ் நாடுகளிடையே வர்த்தக பொருளாதார உறவுகளை மேம்படுத்த உதவும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதால் எந்தவித நிதிச் செலவினமும் இல்லை. பிரிக்ஸ் நாடுகளின் இந்த ஒப்பந்த பங்கேற்பு நாடுகள் இதனால் பெரிதும் நன்மை அடையும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நிர்பந்தங்கள் ஏதும் இல்லாத ஒரு ஒப்பந்தம். தேசிய சட்டங்கள் நெறிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒத்துழைப்பை உருவாக்குவது இதன் நோக்கமாகும். மேலும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளிடையே திறன்கள் மாற்றம், அறிவு பகிர்வு ஆகியவற்றுக்கும் வழி வகுக்கிறது. இத்துடன் என்.டி.பி உருவாக்கப்பட்டிருப்பது பிரிக்ஸ் நாடுகளிடையே நிலவும் நெருங்கிய உறவுகளை குறிப்பதுடன் அவற்றினிடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் ஆற்றல் மிகுந்த கருவியாகவும் பயன்பட்டு இந்தியா அதிகப்படியான சர்வதேச பங்காற்றவும் உதவும். எனவே நிலைத்த மேம்பாடு மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் முக்கியமான தொடர்புடைய ஒத்துழைப்பை கருத்தில் கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவது அவசியமாகிறது. உறுப்பு நாடுகள் பல்வேறு வடிவங்களில் பொருட்கள் மற்றும் சேவைகள் வர்த்தகத்திற்கு வசதி ஏற்படுத்தி மேம்படுத்துவதிலும் பிரிக்ஸ் நாடுகளிடையேயான பரஸ்பர திட்டங்களில் முதலீடு செய்வதிலும் ஏற்பட்டுள்ள பின்னணியில் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.

பின்னணி

பிரிக்ஸ் நாடுகளிடையேயும் நிறுவனங்களிடையேயும் வர்த்தக பொருளாதார உறவுகளை மேம்படுத்த பிரிக்ஸ் நாடுகளின் ஐந்து வங்கிகள் இணைந்து பிரிக்ஸ் சர்வதேச வங்கிக் கூட்டுறவு அமைப்பை உருவாக்கியுள்ளன. பிரிக்சின் இந்த சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பு தற்போது பொது ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நியூ டெவலப்மண்ட் வங்கியுடன் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளது.