பி.எம்.இந்தியா
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் (ICAI) ஓமன் நாட்டு வங்கியியல் நிதி ஆய்வுக் கல்லூரிக்கும் (CBFS) இடையே 2008 மற்றும் 2011 ஆண்டுகளில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு பின்னேற்பு ஒப்புதலையும் இந்த ஒப்பந்த புதுப்பித்தலுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வழங்கியது. ஓமன் நாட்டின் கண்க்கியல் நிதியியல், தனிக்கையியல் அறிவு அடித்தளத்தை வலுப்படுத்துவதில் இணைந்து உழைக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
ICAI – க்கு மத்தியக் கிழக்கு மண்டலத்தில் 6000 –க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட வலுவான உறுப்பினர் அடித்தளம் உள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் CBFS –க்கு ஓமன் நாட்டவர்களை ICAI உறுப்பினர் ஆவதற்கு உதவுவதை நோக்கமாக்க் கொண்டது. உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் நிறுவனங்களின் நலனுக்காக பரஸ்பரம் நன்மை பயக்கும் உறவை மேம்படுத்துவதில் சேர்ந்து உழைப்பதை நோக்கமாக்க் கொண்டது இது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ICAI உறுப்பினர்களுகு அவர்களது தொழில் சார்ந்த அறிவை விரிவாக்கவும் உதவுகிறது. அதே சமயம் ICAI ஓமன் நாட்டவர்களிடையே தொழில் திறன்களை வலுப்படுத்தும் அமைப்பாக உருவெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஓமன் சூல்தானேட்டில் இந்தியா, இந்தியக் குடிமக்கள் மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் ஆகியோர் பற்றிய குறிப்பிடத்தக்க நல்லெண்ணத்தை உருவாக்கம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஓமன் நாட்டில் உள்ள் இந்திய நாட்டவர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் தொகைகளும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓமன் நாட்டில் உள்நாட்டு தொழில்முறை கணக்கியல் நிறுவனம் இல்லை என்பதால் ICAI அந்நாட்டின் CBFS உடன் இணைந்து பணியாற்றுகிறது. தற்போது ஓமன் நாட்டில் பணியாற்றும் இந்திய பட்டயக் கணக்காளர்களின் பால் நேர்மறையான தாக்கத்தை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓமன் நாட்டின் தங்கள் தொழில்களைத் தொடர விருப்பம் கொண்டுள்ள இந்திய தொழில் நடத்துவோரிடையேயும் இது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே மேலும் அதிகமான வேலை வாய்ப்புக்கள் இந்திய தொழில்நடத்துவோருக்கு ஓமன் நாட்டில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னணி:
இந்திய நாடாளுமன்ற சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட அரசியல் சட்ட அமைப்பு ICAI. பட்டயக் கணக்காளர்கள் சட்டம் 1949 இந்தியாவில் பட்டயக் கணக்காளர் தொழிலை முறைப்படுத்துவதற்கு இயற்றப்பட்டது. CBFS என்பது 1983 – ம் ஆண்டு ஓமன் சூல்தானின் அரசகட்டளையின்படி உருவாக்கப்பட்ட அரசு அமைப்பாகும். வங்கியாளர்களுக்கு கல்விப் பயிற்சி மற்றும் வங்கியியல் நிதியியல் பாடங்களில் ஆராய்ச்சி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது இந்த அமைப்பு. இந்த அமைப்பு ஓமன் நாட்டு மத்திய வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. ஓமனில் செயல்படும் வர்த்தக வங்கிகள் அனைத்தும் இதற்கு ஆதரவு அளிக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக ஓமன் நாட்டின் நிதி சேவைகள் தொழிலுக்கு உதவி வரும் இந்த அமைப்பு அதன் மனிதவளத் தேவைகளை சந்திக்கும் வகையில் கல்வி மற்றம் பயிற்சி வகுப்புகளை ஓமன் நாட்டு வளர்ந்துவரும் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைத்து வழங்கி வருகிறது.