பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழு 2016 பிப்ரவரியில் கையெழுத்திடப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்டின் மத்திய வங்கிக்கும் இடையிலான பண நோட்டு பரிமாற்றம் சம்பந்தப்பட்ட ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் வழங்கியது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால் இந்திய ரிசர்வ் வங்கியும் ஐக்கிய அரபு எமிரேட்களின் மத்திய வங்கியும் பண நோட்டு பரிமாற்ற இருதரப்பு உடன்பாட்டை பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிபந்தனைகள் அடிப்படையில் செய்துகொள்ள உறுதி ஏற்கின்றன. உரிய தொழில்நுட்ப ஆலோசனைக்குப் பிறகு இருநாடுகளின் ஒப்புதலுக்கு உட்பட்டு இந்த உறுதி செய்யப்படுகிறது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்களுக்கும் இடையேயான நெருங்கிய பொருளாதார உறவு மற்றம் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். இந்த பண நோட்டு பரிமாற்ற ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தக பணக் கேட்புகளை உள்ளூர் நாணயத்தில் மேற்கொள்ள வசதி ஏற்படுத்துகிறது.