Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தூர் விமான நிலையத்தில் இந்திய விமான தள ஆணையத்திற்கு உரிமையான 1500 சதுர மீட்டர் நிலத்தை அழுகும் பொருட்கள் சரக்ககத்தை உருவாக்குவதற்கென ம.பி. கிடங்கு வசதி நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட முடிவு


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய அமைச்சரவை இந்திய விமான தள ஆணையத்தின் நிர்வாகக் குழு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இந்தூர் விமான நிலையத்தில் அழுகும் பொருட்கள் சரக்கக மையம் ஒன்றை உருவாக்குவதற்கென மத்தியப் பிரதேச மாநில கிடங்கு வசதி நிறுவனத்திற்கு இந்திய விமான தள ஆணையத்திற்கு உரிமையான நிலத்தில் 1500 சதுர மீட்டர் நிலத்தை குத்தகைக்கு விடுவதற்கான தனது ஒப்புதலை அளித்தது..

மாநிலத்திலிருந்து விமான நிலையம் வழியாக அனுப்பப்படும் அழுகும் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான பகுதியாக திகழவிருக்கும் இந்த மையமானது நவீன வசதிகள் கொண்டதாக அமையும். இத்துறையைச் சேர்ந்த அனைத்து வர்த்தகர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் உலகத் தரம் கொண்டதாகவும், பொருட்களின் தரத்தை பேணிப் பாதுகாப்பதாகவும் இந்த மையத்தின் சேவை அமையும். மத்தியப் பிரதேச மாநில கிடங்கு வசதி நிறுவனம் இந்த வசதியை பொது-தனியார் கூட்டு முயற்சியில் உருவாக்கும்.

உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்புத் தேவைகளுக்கு உதவி செய்வதாக இந்த அழுகும் பொருட்கள் சரக்கக மையம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதோடு, கணிசமான அளவிற்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அழுகும் பொருட்கள் சரக்கக மையத்தை நிர்வகிக்க மொத்தம் 113 பேர் தேவைப்படுவார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பின்னணி:

இந்தோர் நகரில் உள்ள தேவி அகில்யா பாய் விமான நிலையத்தில் இந்த அழுகும் பொருட்களுக்கான சரக்கக மையத்தை மத்தியப் பிரதேச மாநில அரசு உருவாக்கும். மத்தியப் பிரதேச மாநிலத்தின் மால்வா பகுதியிலிருந்து கால்நடை உற்பத்திப் பொருட்கள், தோட்டக் கலை உற்பத்திப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கான தேவை பெருமளவில் ஏற்பட்டுள்ள நிலையில்தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் நிலத்தை குத்தகைக்குப் பெறுவதன் மூலம் இந்தோர் விமான நிலையத்தில் அழுகும் பொருட்களுக்கான சரக்கக மையத்தை உருவாக்குவதன் மூலம் மத்தியப் பிரதேச மாநில அரசு தனது விவசாய, தோட்டக்கலை துறைகளுக்குப் பெருமளவில் ஊக்கமளிக்கவும் இயலும்.