பி.எம்.இந்தியா
இளைஞர்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி அரசு வலுவாகச் செயல்பட்டு வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (13.06.2026) தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளின் முக்கிய அம்சங்களில் ஒன்று, இந்திய இளைஞர்கள் தங்களது லட்சியங்களை நம்பிக்கையுடன் அடைய முயற்சி செய்வதுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டார்ட்அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, திறன் இந்தியா, அடல் புத்தாக்க இயக்கம் போன்ற முன்முயற்சிகள் மூலம், புத்தாக்கம், தொழில்முனைவு, நிறுவனங்களை ஊக்குவிக்கும் ஒரு சூழலமைப்பு ஆகியவை உருவாகியுள்ளது என்று திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். இப்போது, இந்தியா உலகின் முன்னணி புத்தொழில் மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்றும், இந்த வெற்றிக் கதைகளில் பல, நமது இளைஞர் சக்தியால், அதுவும் சிறிய நகரங்கள், கிராமங்களில் இருந்து எழுதப்படுகின்றன என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அறிவியல், தொழில்நுட்பம் முதல் உற்பத்தி, விண்வெளி, செமி கண்டக்டர், ட்ரோன்கள் வரை பல்வேறு துறைகளில் இந்திய இளைஞர்கள் தடம் பதித்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின், உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கும் துறைகளில் இளம் இந்தியர்கள் பங்களிப்பதைக் காண்பது மனதிற்கு மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறையிலும் நமது இளைஞர்கள் நாட்டிற்கு அளப்பரிய பெருமையைக் கொண்டு வந்துள்ளனர் என்றும், எண்ணற்ற சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து தேசியப் பெருமையை உயர்த்தி வருகின்றனர் என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும், வலுவான விளையாட்டுச் சூழல், சிறந்த உள்கட்டமைப்பு, விளையாட்டு வீரர்களுக்கான அதிக ஆதரவு ஆகியவை இளம் திறமையாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை ஊக்குவிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் களத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இளைஞர்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி வலுவாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 12 ஆண்டுகளின் முக்கிய அம்சங்களில் ஒன்று, இந்திய இளைஞர்கள் தங்கள் லட்சியங்களை நம்பிக்கையுடன் அடைய முயல்வதுதான்.
ஸ்டார்ட்அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா, அடல் புத்தாக்க இயக்கம் போன்ற முன்முயற்சிள் மூலம், புத்தாக்கம், தொழில்முனைவை ஊக்குவிக்கும் ஒரு சூழலமைப்பு உருவாகியுள்ளது.
இப்போது, இந்தியா உலகின் முன்னணி புத்தொழில் மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும், இந்த வெற்றிக் கதைகளில் பல, நமது இளைஞர் சக்தியால், அதுவும் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்துதான் எழுதப்படுகின்றன.
இந்திய இளைஞர்கள் அறிவியல், தொழில்நுட்பம் முதல் உற்பத்தி, விண்வெளி, செமி கண்டக்டர், ட்ரோன்கள் வரை பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருகின்றனர். நமது தேசத்தின், உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகும் துறைகளுக்கு இளம் இந்தியர்கள் பங்களிப்பதைக் காண்பது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.
நமது இளைஞர்கள் விளையாட்டுத் துறையிலும் நாட்டிற்கு அளவற்ற பெருமையைக் கொண்டு வந்துள்ளனர். எண்ணற்ற சர்வதேசப் போட்டிகளில், இளம் இந்திய விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து தேசியப் பெருமையை உயர்த்தி வருகின்றனர்.
அதே சமயம், வலுவான விளையாட்டுச் சூழல், மேம்பட்ட உள்கட்டமைப்பு, விளையாட்டு வீரர்களுக்கான பரந்த ஆதரவு ஆகியவை இளம் திறமையாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை ஊக்குவிக்கின்றன.
***
(Release ID : 2272394)
TV/PLM/RJ
The NDA Government is one that is strongly working towards youth-led development. One of the defining features of the last 12 years has been the confidence with which India’s youth have pursued their aspirations.
— Narendra Modi (@narendramodi) June 13, 2026
Through initiatives such as Startup India, Digital India, Skill…
India’s youth are making their mark across various sectors, from science and technology to manufacturing, space, semiconductors and drones. It is heartening to see young Indians contributing to areas that will shape the future of our nation and the world.
— Narendra Modi (@narendramodi) June 13, 2026
Our youth have also…