Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, நீதியரசர் ஏ.எஸ். ஆனந்த் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, நீதியரசர் ஏ.எஸ். ஆனந்த் மறைவு குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, நீதியரசர் ஏ.எஸ்.ஆனந்த் மறைவு குறித்து கவலை அடைந்துள்ளேன். துயரமான இந்த தருணத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மீது உள்ளது. அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

*****