பி.எம்.இந்தியா
மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின் செயலாளராக பணியாற்றும் திரு. ராஜிவ் மெஹ்ரிஷி, ஐ.ஏ.எஸ். அவர்கள் உள்துறை அமைச்சகத்தின் செயலாளராக இன்று முதல் பணியாற்றுவார். பிரதமர் திரு. நரேந்திர மோடி இவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாகும். இவர், திரு. எல்.சி. கோயலைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை, உள்துறை செயலாளராக இருந்த எல்.சி. கோயல், ஐ.ஏ.எஸ். தனது சொந்த காரணங்களுக்காக விருப்ப ஓய்வு பெற்றார். இதற்கும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.